அனைவருக்கும் வணக்கம், யூனிவேர்சல் லவ்ஸ் தொடர்ல அடுத்து பார்க்க இருக்க விதி – தொடர்பு விதி (Law of Correspondence). மேலும் இந்த விதியுடன் Hermetic Philosophy மற்றும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம்.
Low of Correspondence
தொடர்பு விதி என்பது இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒரு சில குறிப்பிட்ட வடிவங்கள் அல்லது அமைப்புகள் திரும்ப திரும்ப அமையுமாறு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது நம்முடைய எதார்த்தமான வாழ்வு, நம்முடைய அப்போதைய அகசூழலின் கண்ணாடி பிரதிபலிப்பாக இருக்கும்னு சொல்லுறாங்க.
அதாவது நமக்கு உள்ள இருக்குற உணர்வுநிலை மற்றும் அதிர்வுநிலையை பொருத்து தான் நம்முடைய வெளிசூழலில் நிகழ்வுகளாக நிகழ்வதாக சொல்லுறாங்க.
ஒரே வெளிப்புற சூழ்நிலைல இருக்க இரண்டு பேர், அந்த சூழ்நிலையை ஒரே மாதிரி தான் கையாளுவர்களா? இல்லை, அவர்களுடைய அனுபவம் அப்போது உள்ள உணர்வுநிலை மற்றும் சில காரணங்களை பொறுத்து அவங்க செயல்படுவாங்க.
ஒரே சூழ்நிலையில் ஒருத்தர் மகிழ்ச்சியாகவும் இன்னோருத்தர் சோகமாகவும் மாற்றிக்க முடியும். மேலும் ஒருவர் இந்த இரண்டும் இல்லாம நகர்ந்து போகவும் முடியும்.,
இப்படி அவங்க செயல்பட்டு அவங்களுடைய அனுபவம்,அப்போதைய உள்ளுணர்வு மற்றும் வெளிசூழ்நிலை ஆகியவற்றை பொருத்து நிகழ்வுகளாக நிகழ்கிறது.
ஆனால், இதே விஷயத்தை இதற்கு மாறாகவும் நிகழலாம் அப்படினு சொல்லுறாங்க அதாவது அவங்களுடைய வெளிசூழலால் அவர்கள் ஒருசில விஷயங்களை நோக்கி நகர்த்தப்படலாம்னு நம்புறாங்க.

சரி இப்போ Hermetic Philosophy -ல இந்த Law of Correspondence யா பத்தி என்ன சொல்லிருங்கனு பார்க்கலாம்.
Hermetic Philosophy
அதற்கு முன்னாடி இந்த ஹெர்மடிக் (Hermetic) – பழங்கால எகிப்திய மற்றும் கிரேக்க கலாசாரத்தை கொண்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பு மதம் மற்றும் தத்துவத்தின் அடிப்படையில் சில விதிகளை சொல்லிருக்கு.
இவை அனைத்தும் கைபாலியன் புத்தகத்துல சொல்லப்பட்டுள்ளது.இந்த Philosophy அடிப்படையே மேலே உள்ளபடியே கீழே மற்றும் உள்ளே உள்ளபடியே வெளியே மற்றும் இதற்கு மாறாக கீழே உள்ளபடியே மேலே மற்றும் வெளியே உள்ளபடியே உள்ளே.

இது எப்படி நமக்கு பொருத்தும்னு பார்ப்போம். நம்முடைய நிலைய மூன்று தளங்களா பிரிக்கலாம். அவை – பொருள், மனம், ஆன்மா (Physical, Mental & Spiritual). இந்த மூன்று தளங்களும் எப்போதும் ஒன்றுக்கொன்று தொடர்புல தான் இருக்கும். இவற்றில் எதாவது ஒன்னுல ஏற்படுற மாற்றம் மற்ற தலங்களையும் பாதிக்கிறது.
அதாவது, இப்போ பொருள் தளத்துல நம்ம செய்யுற சில விஷயங்கள் நம்முடைய மன மற்றும் ஆன்ம தளத்தை பாதிக்கிறது. இதைபோல தான் நம்முடைய ஆன்ம தளத்துல ஏற்படுற மாற்றம் நம்முடைய மன மற்றும் பொருள் தளத்துல பாதிப்பை ஏற்படுத்தும்.
சரி அடுத்தது, இந்தவிதி எப்படி, சோதிடத்துடன் பொருந்தி போகுதுனு பார்ப்போம்.விதி அடிப்படையே மேலே உள்ளபடியே கீழே வெளியே உள்ளபடியே உள்ளே.

Astrology
சோதிடம் என்பது நம்மையும் நம்மை சுற்றியுள்ள கோள்கள் மற்றும் வீண்மீன்களின் அடிப்படை தொடர்பு தான். இதன்படிபார்த்தால் இந்த கோள்கள் மற்றும் வீண்மீன்கள் நம்மை சுற்றியோ அல்லது மேலேயோ இருக்குனு எடுத்துக்கொள்வோம்.
மேலும் இதற்கு முந்தைய விதிகளில் ஒன்னான (law of divine oneness) அடிப்படையில் பார்த்தா நம்ம எங்க இருந்து அதாவது எந்த மூலத்துல இருந்து தோன்றியதோ அதே மூலத்துல இருந்து தான் இந்த பிரபஞ்சமும் அனைத்து கோள்கள் மற்றும் வீண்மீன்கள் தோன்றியதுனு பார்த்தோம்.
அதற்கு அடுத்தபடியா (Law of Vibration) அடிப்படையில் எல்லா பொருள்களும் அதிர்வு உள்ளது மேலும் நம்ம எல்லாவிதமான அதிர்வுகளையும் கிரகிக்கும் தன்மையில் படைக்கப்பட்டுள்ளது.
நம்மை சுற்றியுள்ள கோள்கள் மற்றும் வீண்மீன்களிருந்து வெளிப்படும் அதிர்வுகளை நம் உடல் கிரகித்து அதற்கு ஒத்த சில அதிர்வுகள் மூலமா உணர்வுகள் அல்லது எண்ணங்களை உருவாக்கி செயல்படுத்தும்.
நாம் பிறக்கும்போது இருக்குற கிரகநிலையை பொறுத்து தான் நம்முடைய விதியே அமையுதுனு சொல்லுறாங்க. சரி அப்படினா நம்மால இந்த கோள்கள் மற்றும் வீண்மீன்கள் அதிர்வின் தாக்கத்துல இருந்து தப்பமுடியாதுனு கேட்டா அதற்கும் வழி இருக்கு.
இந்த கோள்கள் மற்றும் வீண்மீன்கள் எல்லாம் நம்மை ஒரு விஷயத்தை செய்வதற்கு கட்டாயப்படுவதில்லை. அவை நம் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கிரகங்களின் தாக்கத்தை நாம் எப்படி கையாள்கிறோம் என்பது பொறுத்து தான் மாறுபடும்.
இந்த வாழ்க்கையை நாம் வெளிப்புறமா அனுபவிக்கிறோம்னு நினைக்கிறோம். ஆனா வாழ்க்கையை நாம நம்முடைய உள்புறதுல தான் அனுபவிக்கிறோம். எடுத்துக்காட்டா மகிழ்ச்சியோ துக்கமோ நமக்குள்ள தான் ஏற்படுகிறது அப்படிகிறத புரிச்சுக்கிட்ட போதும்.
எங்களுடைய YouTube Channel – Subscribe செய்து இதுபோன்ற பதிவுகளை காணொளிகளாக காணுங்கள்.
[…] Law of Correspondence – வாழ்வே கண்ணாடி பிம்பம் […]