அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவுல நாம் பார்க்க இருக்குற விதி Law of Transmutation of Energy also known as ஆற்றலின் நிரந்தர தொடர் மாற்ற விதி. இதுல இந்த விதி எப்படி செயல்படுது அப்படிகிறதையும், இந்த ஆற்றலின் தன்மை இதை எப்படியெல்லாம் பயன்படுத்தி வந்திருக்கோம்னு பார்ப்போம்.
Universal Laws
இதுவரை நாம் பார்த்த விதிகளில், முதலாவது விதியான தெய்வீக ஒருமை விதியில் படைப்புகள் அனைத்தும் ஒரே மூலத்தில் இருந்து வந்ததுனும்,
இரண்டாவது விதியான அதிர்வுகள் விதியில் பொருள் மற்றும் பொருளற்ற தன்மையுள்ளவை கூட இந்த அதிர்வுகளின் ஆதிக்கம் இருக்குனும்,
மூன்றாவது விதியான தொடர்பு விதியில் நமக்குள்ளே மற்றும் வெளியே உள்ள நிலைக்கான தொடர்பு பற்றியும்,
நான்காவது விதியான தூண்டப்பட்ட செயல்விதியில் எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கான இணைப்பு பற்றியும் பார்த்தோம்.

Law of Transmutation of Energy
இப்போது நாம் பார்க்க இருக்க விதி ஆற்றலின் நிரந்தர தொடர் மாற்ற விதி. முதலில் ஆற்றல் என்றால் என்னனா? ஒரு உருவாக்கம் மற்றும் செயலுக்கு தேவையான அடிப்படை தன்மையே ஆற்றல் தான்.
நாம், Physics -ல கேள்விப்பட்ட மாதிரி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அதே நேரத்துல ஒருவகை ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றமுடியும். இதுதான் இந்த விதியோட அடிப்படையே.
இந்தவிதி மற்ற பிரபஞ்ச விதிகளை போலவே, பிரபஞ்சத்தைப் போலவும் பழமையானது. பெருவெடிப்பு தான் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு காரணம்னு நாம் பார்த்தோம். அந்த பெருவெடிப்பு தான் முதல் ஆற்றல் மாற்றத்திற்கு வழிவகுத்தது. பின் ஆற்றல் மாற்றம் தான் நமக்கு தெரிந்த அனைத்தையும் உருவாக்கியது. கடந்த பல பில்லியன் ஆண்டுகளாக இந்த ஆற்றல் முடிவில்லாமல் வடிவம் மாறிக்கொண்டே வந்திருக்கு.
ஆற்றலின் நிரந்தர மாற்றமானது இயக்கத்தில் உள்ள அனைத்து ஆற்றலும் இறுதியில் பொருள் வடிவமாக மாறி பின்னர் மீண்டும் ஆற்றலாக வெளி வரும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது.
நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் உள்ள முடிவில்லாத ஆற்றலை குறிப்பிட்டு மாற்றுவதன் மூலம் low vibration ஐ high vibration ஆகவும், எதிர்மறை ஆற்றலை நேர்மறை ஆற்றலாகவும் மாற்ற இயலும்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் நிலையான இயக்கத்தில் உள்ள ஆற்றல் என்பதை நாம் உணரவில்லை. இந்த ஆற்றலைதூண்டுவதன் மூலம் நாம் விரும்பும் மாற்றத்தை பெற முடியும்.
இந்த ஆற்றலின் உறவை புரிந்து கொள்ளும்போது அதிக ஆற்றலை நம் வழியாக பாய அனுமதிப்பதும் யதார்த்தத்தில் மாற்றத்தை உருவாக்குவதும் எளிதாகிறது. இந்த ஆற்றல் நிரந்தர மாற்ற விதியை நம் முன்னோர்கள் கண்டு உணர்ந்து மருத்துவம் வழிபாடு மற்றும் சித்தர் வழிமுறைகளில் பயன்படுத்தி உள்ளனர்.
ஆற்றலின் பிறழ்வு அல்லது எதிர்மறை ஆற்றலின் தாக்கமே நோய்களின் காரணம்.
இப்படிப்பட்ட நோய்களை நம் முன்னோர்கள் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தன்மைகளின் வேறுபாட்டை வைத்து அறிந்தார்கள். இந்த மூன்று தன்மைகளின் ஆற்றலில் ஏற்படும் சமநிலையின்மையே நோய்க்கான மூலகாரணம் என்பதை நன்கு அறிந்து வைத்ததன் மூலம் இவற்றை சரி செய்தாலே னாய் குணமாகும் என்பதையும் நிரூபித்தார்கள். நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துகளின் வாத, பித்த மற்றும் கபத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் தன்மையை அறிந்து அதை கொண்டு நோயாளின் ஆற்றலை மாற்றி நோயை சரிசெய்தார்கள்.
இது மட்டும் அன்றி, வர்ம மருத்துவத்திலும் நம் உடலில் உள்ள சில வர்ம புள்ளிகளை தூண்டுவதன் மூலம் நம் உடலே நோயை சரி செய்வதற்கான ஆற்றலை தானாக பெற்று நோயை சரிசெய்து கொள்கிறது.
சீனாவின் மரபு மருத்துவமான அக்குபங்சர் பிரபஞ்ச ஆற்றலை கொண்டு பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் நோயை சரிசெய்கின்றன.
பட்டினியே சிறந்த மருந்து என்ற கூற்று, நமது உடலின் மற்ற செயல்களுக்கான ஆற்றலை கொண்டு நோயை குணப்படுத்தும் ஆற்றலை பெறுவதையே குறிக்கிறது.
மேலும், சித்தர்களின் சமாதிகளும் இம்முறையான ஆற்றல் மாற்றத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. சித்தர்களின் ஜீவசமாதி பற்றிய பதிவு ஒன்றை நமது YouTubeல் பதிவு செய்துள்ளோம். தவறாமல் அதை பாருங்கள்.
விழிப்புணர்வையும், உறுதியான நோக்கத்தையும் நம்முடைய எண்ணங்கள் மற்றும் செயல்களில் கொண்டு வரும்போது நம்முடைய தனிப்பட்ட ஆற்றலில் பல மாற்றங்களை காணலாம்.
இருக்கும் ஆற்றல் இறக்காது. மாறாக ஆற்றல் மாற்றங்கள் மீண்டும் மீண்டும் உருவாகின்றன. நமது உயிரே ஒரு மகத்தான ஆற்றல் தானே.
நன்றி.
எங்களுடைய YouTube Channel – Subscribe செய்து இதுபோன்ற பதிவுகளை காணொளிகளாக காணுங்கள். https://www.youtube.com/@YaazhLife