இன்றைய காலகட்டத்தில் மாற்று மருத்துவத்தின் பங்கு அதிகமாக உள்ளது. ஆனால் அதை பற்றிய மக்களுக்கு விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. மேலும் நமக்குத் தெரிந்த மாற்று மருத்துவ முறைகள் சிலவே ஆனால் பலதரப்பட்ட முறைகள் இன்னும் அறியப்படாமலே உள்ளன.இன்றும் நம் நாட்டில் மக்கள் சில மாற்று மருத்துவ முறைகளை பின்பற்றி வருகின்றனர்.
நம் உடல்நிலை மற்றும் மன நிலைக்கு ஏற்றவாறு மருத்துவ முறையை தேர்ந்தெடுத்து மருத்துவம் செய்யும்போது பல வகையான தீர்க்கமுடியாத நோய்களையும் குணப்படுத்த முடியும்.
இன்று அவற்றில் சில மருத்துவ முறைகளை இப்பதிவில் காண்போம்.
இந்த மாற்று மருத்துவத்தைப் பற்றி பேசும் போது அதன் வரலாறு கோட்பாடு தத்துவங்கள் அடிப்படைகள் இப்படி பலவகையான செய்திகளைப் பற்றி நாம் கேட்கும்போது நிறைய வகையை பதிவுகளையும் பாடத்தையும் படிப்பது போன்ற உணர்வை கொடுக்கும்.ஆகையால் இனிவரும் மருத்துவ முறைகளின் முக்கியமான சாரத்தை மட்டும் பார்ப்போம்.


இயற்கை மருத்துவம்


இந்த மருத்துவம் நோய்களை தீர்க்க சில விஷயங்களை கூறுகிறது. உடல் தன்னை தானாக குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது.
நோய் அறிகுறிகளை நீக்குவதற்கு எந்த சிகிச்சையும் அளிக்கத் தேவையில்லை. நோயின் அறிகுறிகள் என்பது நம் உடம்பில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை சமநிலைக்கு வருவதற்காக முயற்சிப்பது ஆகும்.


தண்ணீர் மருத்துவம்

இம்மருத்துவ முறை தண்ணீரை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாகும்.
இதில் பனிக்கட்டி, திரவம் மற்றும் ஆவி ஆகிய மூன்று நிலைகளிலும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இதில் சுடுநீர் உடலுக்கு தளர்வையும் மற்றும் குளிர்ந்த நீர் உடலுக்கு புத்துணர்வை தருகிறது. மேலும் மூலிகைகளை கலந்து குளிக்கும் பலவகை குளியல்கள், தைல குளியல், மசாஜ் குளியல் மற்றும் இடுப்பு குளியல் ஆகியவைகளும் அடங்கும்.


இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கொடுக்கப்படும் குளியல் மலச்சிக்கல், மூல நோய், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த வழிவகுக்கும்.

உண்ணா நோன்பு


உண்ணா நோன்பு என்பது முழுமையாக பட்டினி கிடத்தலையோ அல்லது தண்ணீர் அருந்தாமல் இருப்பதையோ குறிப்பிடுவது கிடையாது.
எந்த வகையில் உண்ணாநோன்பு இருந்தாலும் ஏதாவது ஒரு திரவ உணவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்
இம்முறை தவறான உணவு பழக்கங்கள், மன அழுத்தம் மோசமான காற்று இவைகளால் நம் உடம்பில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை சுத்தம் செய்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுகிறது. இதனால் நோய் குணமடைய செய்கிறது. உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து செரிமான அமைப்பை நன்கு செயல்பட உதவுகிறது.
இரண்டு நாட்கள் உண்ணாநோன்பு பாதுகாப்பு. கர்ப்பிணிப் பெண்கள் இளம் பிள்ளைகள் கடுமையான நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று உண்ணாநோன்பை கடைபிடிக்கலாம்.


அக்குபங்க்சர்


இம்மருத்துவ முறை உயிராற்றல் சக்தி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது . உயிராற்றல் சக்தி தான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாகும்
மனித உடம்பில் இந்த சக்தி 14 பெரும் உயிர் ஆற்றல் வழிகளின் மூலம் ஓடுகிறது. இவற்றை கண்களால் நேரடியாக காண இயலாது , ஆனால் அந்த சக்திகளை மின்சாரம் மூலம் அறிய முடியும் என நவீன அறிவியல் காட்டியுள்ளது . பெரும்பாலான உயிராற்றல் சக்திகள் ஏதாவது ஒரு பெரிய உள்ளுறுப்போடு தொடர்புடையது
உடலில் உள்ள உயிராற்றல் சக்தி ஓட்டப்பாதையின் மீது 356 அக்குபங்சர் புள்ளிகள் உள்ளன


இந்த உயிராற்றல் சக்தி ஓட்ட பாதையில் தேர்ந்தெடுத்த மையங்களை அக்குப்பங்சர் ஊசியால் குத்தி உயிராற்றல் சக்தி தூண்டப்படுகிறது. இதனால் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட்டு சமநிலையில் இருக்கிறது


அக்குபிரஷர்


ஏதாவதுபொருள் கொண்டு அல்லது விரல் நுனியால் அல்லது நகத்தின் மூலமாக உடலில் உள்ள அக்குபிரஷர் மையங்களில் அழுத்தம் செய்யும் போது உயிராற்றல் சக்தி போட்ட தடைகளை நீக்கி அதன் ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

மோக்ஸிபஸ்டீன்


Moxa எனப்படும் எரி மூலிகையை கூம்பிற்குள் நிரப்பி தீயிட்டு அக்குபங்சர் மையங்களில் சூடு உணருமாறு வைத்து நோய் குணமாகப்படுகிறது
இம்முறையில் உடம்பில் உள்ள சக்தி ஓட்ட வழிகளில் உயிராற்றல் சக்தி ஓட்டம் மேம்படுகிறது . இது கழுத்துப் பிடிப்பு பலவகையான முதுகு மற்றும் தோள்பட்டை வலிகள் மற்றும் நரம்புத்தளர்ச்சி இவைகளை குணப்படுத்துகிறது


திபெத்திய மருத்துவம்


திபெத்திய மருத்துவ முறை நீண்ட காலத்திற்கு முன்பே தோன்றியது இந்த மருத்துவ முறையை இந்தியா சீனா அரேபியா போன்ற நாட்டு மருத்துவ முறைகள் கலந்த ஒன்றாகும்
உடல் அல்லது மன நிலையை தீர்மானிக்கின்ற மூன்று கூற்றுகள் அனைத்து உயிர்களிலும் காணப்படுகிறது இவற்றை கட்டுப்படுத்தும் உறுப்புகள் உடலில் செயல்படுகின்றன இந்த மூன்று கூறுகளிலும் ஏற்படுகின்ற சீரற்ற நிலையை நோய்களுக்கான காரணமாக கருதப்படுகிறது
காற்று – சுவாசித்தல் மற்றும் இயக்கம் தொடர்புடையது
பித்தம் – செரிமானம் மனநிலை உணர்வு தொடர்புடையது
கோழை – உறக்கம் , மூட்டு இணைப்பு , தோலின் மென்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது
மனம் உருவாக்கும் சிக்கலான ஆசைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இறையாகி விடுகின்றோம் . இவை மேலும் பற்று வெறுப்பு குழப்பம் ஆகிய மூன்று மனநிலைகளை உருவாக்குகிறது . இவை உடலின் சமநிலையற்ற தன்மையை உருவாக்கி விட்டுச் செல்கின்றன . மேலும் சுற்றுச்சூழல் , உணவு , வாழ்க்கைமுறை மற்றும் காலநிலை இவைகள் மூலமும் ஒரு மனிதனுக்கு நோய்கள் உருவாகின்றன
திபெத்தில் இன்றும் மருத்துவம் மற்றும் சமயம் மாயாஜால தோடு தொடர்புடையதாகவே உள்ளது.
,……………தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English